நீலகிரி பிளஸ் 2 பொது தேர்வு - 71 பேர் ஆப்சென்ட்
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வுக்கு தகுதி பெற்ற 6158 பேரில் 6087 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 71 பேர் வருகை புரியவில்லை.
தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வுகள் இன்று தொடங்கின. நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 85 பள்ளிகளை சேர்ந்த 2,820 மாணவர்கள் மற்றும் 3,338 மாணவிகள் என மொத்தம் 6,158 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இன்று நடந்த தமிழ் தேர்வில் பள்ளி மாணவர்கள் மொத்தம் 6,158 பேரில் 6,087 பேர் தேர்வு எழுதினர். 71 பேர் வருகை புரியவில்லை. மலையாள பாடத்தில் மொத்தம் 137 பேரில் 137 பேர் தேர்வு எழுதினர். பிரெஞ்சு பாடத்தில் மொத்தம் 328 பேரில் 327 பேர் தேர்வு எழுதினர். ஒருவர் தேர்வுக்கு வரவில்லை. ஹிந்தி பாடத்தில் மொத்தம் 89 பேரில் 89 பேர் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களில் தமிழ் முதல் தாள் மொத்தம் 46 பேரில் 43 பேர் தேர்வு எழுதினர். 3 பேர் வருகை புரியவில்லை. ஹிந்தி பாடத்தில் 56 பேரில் 55 தேர்வு எழுதினர். ஒருவர் தேர்வு எழுதவில்லை. தனித்தேர்வர்கள் 28 பேரில் 27 பேர் தேர்வு எழுதினர். ஒருவர் தேர்வு எழுதவில்லை. நீலகிரி மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொது தேர்வுக்கு தகுதியுடைய பள்ளி மாணவர்கள் 6158 பேரில் 6087 பேர் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 71 பேர் வருகை புரியவில்லை.
Next Story