72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 4,777 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மா.மதிவேந்தன் மற்றும் எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – 2025-ல் 4,777 பயனாளிகளுக்கு ரூ.72.07 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்,மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களை பாராட்டி பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், ஸ்ரீமஹால் திருமண மண்டபத்தில் இஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமையில், மாண்புமிகு மேயர் .து.கலாநிதி முன்னிலையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – 2025-ல் 4777 பயனாளிகளுக்கு ரூ.72.07 கோடி மதிப்பிட்டில் அரசு நலத்திட்ட உதவிகள், மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களை பாராட்டி பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.முன்னதாக கூட்டுறவு வார விழா – 2025 முன்னிட்டு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கூட்டுறவு சங்க கொடியினை ஏற்றி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நாமக்கல் மாவட்டத்தில் 14.11.2025 முதல் இன்று 20.11.2025 வரை கூட்டுறவுத்துறையின் சார்பில் 72-ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா-2025 சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. கூட்டுறவு வார விழாவில் சுற்றுலா, சுகாதாரம், பசுமை எரிசக்தி, கூட்டுறவு உருவாக்கும் தளங்கள், சமையலறை கூட்டுறவுகள் மற்றும் பல சாத்தியமான துறைகள் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் கூட்டுறவுகளை விரிவுபடுத்துதல் என்ற மைய கருத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு நாளும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் கூட்டுறவு வார நிறைவு விழா மிக சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு மிகவும் பிரம்மாண்ட அளவில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தினசரி ரூ.5.00 கோடி என ரூ.1825 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தினசரி ரூ.7.50 கோடி என ரூ.2735 கோடியும், அடுத்த ஆண்டு தினசரி ரூ.10.00 கோடி என ரூ.3650 கோடி வழங்கப்படவுள்ளது. நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக மத்திய கூட்டுறவு வங்கி மாறியுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மாநில அளவில் சிறப்பான கூட்டுறவு வங்கியாக திகழ அனைத்து நிர்வாகிகளும், பணியாளர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். கூட்டுறவு வங்கிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி சிறப்பான முறையில் சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து இந்த ஆண்டை சர்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு சிறப்பான திட்டங்களை வழங்கியுள்ளார்கள் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் மாவட்டமானது 1996-ம் ஆண்டு டாக்டர் கலைஞர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 165 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 4 மலைவாழ் பெரும் பல்நோக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள், 393 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், 86 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், 26 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 5 கூட்டுறவு நகர வங்கிகள், 7 தொடக்க கூட்டுறவு வேளாண் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட 746 இணைப்பு சங்கங்களுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டத்திற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறுதொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும், பல்வேறு சிறப்புகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள 2 வருவாய் கோட்டங்கள் 8 தாலுக்காக்கள் 30 வருவாய் பிர்க்காக்களை உள்ளடக்கி நாமக்கல் மாவட்டத்தை செயல் எல்லையாகக் கொண்டு நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கிட அரசாணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கூட்டுறவுத் துறை சார்பில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து பிரித்து நாமக்கல் மாவட்டத்தை செயல் எல்லையாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கி வைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதலாவதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஒரு மேலாண்மை இயக்குநர், ஒரு முதன்மை வருவாய் அலுவலர், ஒரு பொது மேலாளர், 2 உதவிப் பொது மேலாளர்கள், 23 மேலாளர்கள், 34 உதவி மேலாளர்கள், 93 உதவியாளர்கள், 4 அலுவலக உதவியாளர்கள் ஆகிய 159 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது அதிநவீன வசதிகளுடன் தனியார் வங்கிகளுக்கு இணையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 30 கிளைகளை கொண்டு இயங்க இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மிக வலுவாக இருப்பதற்கு காரணம், அடிப்படையாக இங்குள்ள பணியாளர்கள், செயலாட்சியர்கள், செயலாளர்கள் ஆகும்.நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நகர்வோர் நலன் கருதி அனைத்து வசதிகளுடன் கூடிய 2.0 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தானிங்கி நவீன பால்பண்ணை ரூ.100.00 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது., இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் புதிய பால்பண்ணை பயன்பாட்டிற்கு வரும் பொழுது மாவட்டத்தில் உள்ள 15,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுமார் 4 இலட்சம் நுகர்வோர் பயனடைவார்கள். மேலும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதோடு, 1000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. நாமக்கல் நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புறவழிச்சாலையானது ரூ.600.00 கோடி மதிப்பில் 4 கட்ட பணிகள் முடிக்கப்பட்டு, 5 மற்றும் 6வது கட்ட சாலை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாராசரியாக நாளொன்றுக்கு 1700 புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.முதலமைச்சர் அவர்களின் கடந்த நான்கரை ஆண்டு கால நல்லாட்சியில் நாமக்கல் மாவட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், 57316 விவசாயிகளுக்கு ரூ.568.52 கோடி மதிப்பிலான பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குட்பட்ட நகைக்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 47104 பயனாளிகளுக்கு ரூ.223.92 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி, சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் 3784 சுயஉதவிக் குழுக்களுக்கு 36,249 பயனாளிகளுக்கு ரூ.87.27 கோடி மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளின் நலன்கருதி கூட்டுறவுத்துறையின் மூலம் 2,27,929 பயனாளிகளுக்கு ரூ.2,398.49 கோடி வட்டியில்லா பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.விவசாய பெருமக்களின் மேம்பாட்டிற்காக கூட்டுறவு துறையின் மூலம் 48,618 பயனாளிகளுக்கு ரூ.372.32 கோடி வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு 5,382 பயனாளிகளுக்கு ரூ.55.61 கோடி மத்திய காலக்கடன், வேளாண் விளைபொருள்களுக்கு 975 விவசாயிகளுக்கு ரூ.43.49 கோடி தானிய ஈட்டுக் கடன், பொது மக்கள் பயன்பெறும் வகையில் 7,70,936 பயனாளிகளுக்கு ரூ.6,470.10 கோடி நகைக்கடன், மகளிர் மேம்பாட்டிற்காக 11,727 சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ரூ.513.08 கோடி கடன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 4,777 பயனாளிகளுக்கு ரூ.72.07 கோடி மதிப்பிட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்தெரிவித்தார்.தொடர்ந்து, 3487 பயனாளிகளுக்கு ரூ.41.01 கோடி மதிப்பில் வட்டியில்லா பயிர்கடன், 825 பயனாளிகளுக்கு ரூ.7.10 கோடி மதிப்பில் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், 33 பயனாளிகளுக்கு ரூ.90.00 கோடி மதிப்பில் மத்தியக் காலக்கடன், 184 மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 2278 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.18.83 கோடி மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழுக் கடன், 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.00 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி, 223 பயனாளிகளுக்கு ரூ.10.00 இலட்சம் மதிப்பில் டாப்செட்கோ கடன், ௧௦ பயனாளிகளுக்கு ரூ.4,000/- மதிப்பில் சிறுவணிக கடன், 166 பயானிகளுக்கு ரூ.2.83 கோடி மதிப்பில் இதர கடன் என மொத்தம் 4777 பயனாளிகளுக்கு ரூ.72.07 கோடி மதிப்பிட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 40 கூட்டுறவு நிறுவனங்கள், சிறப்பாக பணியாற்றி 8 பணியாளர்கள், சிறந்த விற்பனையாளர்களாக 8 பணியாளர்கள், சிறந்த உறுப்பினர் 5 பணியாளர்கள், சிறு சேமிப்பு திட்டம், வினாடி வினா, கோலப்போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி, ஸ்லோ சைக்கிள், ஸ்லோ பைக் போட்டிகளில் வெற்றி பெற்ற 29 பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்திய 4 பள்ளிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் .மோ.செல்வராஜ், துணை மேயர் செ.பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் .மா.சந்தானம், மாவட்ட வருவாய் அலுவலர் / மேலாண்மை இயக்குநர் (சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர்) .இரா.குப்புசாமி, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் இணைப்பதிவாளர்/செயலாட்சியர் திருமதி.ச.யசோதாதேவி, துணைப்பதிவாளர் சே.ஜேசுராஸ் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story