விருத்தாசலம்: ஒரே நாளில் 726 மூட்டைகள் குவிந்தது

விருத்தாசலம்: ஒரே நாளில் 726 மூட்டைகள் குவிந்தது

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் நெல் , எள், மக்காசோளம் உள்ளிட்ட 726 தானிய மூட்டைகள் குவிந்ததுள்ளது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 63 மூட்டை, எள் வரத்து 40 மூட்டை, நெல் வரத்து 360 மூட்டை, உளுந்து வரத்து 22 மூட்டை, கம்பு வரத்து 170 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 65 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 5 மூட்டை, ஆமணக்கு வரத்து 1 மூட்டை என மொத்தம் 726 மூட்டை வந்துள்ளது.

Tags

Next Story