தர்மபுரி தொகுதியில் 73.51 சதவீத வாக்குகள் பதிவு
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மேட்டூர் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் திமுக அதிமுக ,பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் என 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 7,70,897 ஆண் வாக்காளர்களும், 7,53,820 பெண் வாக்காளர்களும், 179 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 15,24,896 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று காலை 9 மணி நிலவரப்படி 7.22 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 29.24 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 46.09 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 58.87 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 73.51 சதவீதமும் வாக்குகள் பதிவானது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இறுதியில் ஒட்டுமொத்தமாக 73.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.