75 வது பாரத சாரண சாரணியர் வைரவிழா

X
அரியலூர்,ஜன.27- 75 வது பாரத சாரண சாரணியர் வைரவிழா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு தேசிய திரளணி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 3 வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. இம்முகாமில் பங்கு பெரும் அரியலூர் வருவாய் மாவட்டத்தை சேர்ந்த அரியலூர் சாரண மாவட்டம் . உடையார்பாளையம் சாரண , செந்துறை சாரண மாவட்டத்தில் இருந்து 42 சாரண சாரணியர்களும் அவர்களோடு மூன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூன்று சாரணிய ஆசிரியர்கள் உடன் செல்கிறார்கள். இவர்களை அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன (இடை நிலை) கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். உடன் பள்ளித் துணை ஆய்வாளர் செல்வகுமார் சாரண மாவட்ட செயலாளர்கள் பாண்டியன் கார்த்திகேயன், பீட்டர், ஆரோக்கியதாஸ், மற்றும் சாரணிய ஆசிரியைகள் அமுதவல்லி, அம்பிகா, கோகிலா ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

