ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்

X
மின்னல் சித்தாமூர் ஊராட்சி யில் தமிழ்நாடு முதலமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 75 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம் செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் ஒன்றியம் மின்னல்சித்தாமூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை கடந்த 20 ஆண்டுகளாக சேதம் அடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 75 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை மற்றும் தாழ்வான பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை போடும் பணி ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், மாவட்ட ஆதி திராவிட நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 20 ஆண்டு காலம் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
Next Story

