75 மதுபான கடைகள் மூடல் - ஆட்சியர் அறிவிப்பு
டாஸ்மாக்
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள 75 மதுபான கடைகளை வரும் ஜன. 10ம் தேதி மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டம், மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதிபாண்டியனின் 12-வது நினைவு தினம் 10.01.2024 அன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ் நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)-ன் படி, 75 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story