தந்தை மேல்மலையனூரில் ஆசிரியையிடம் 7.5 சவரன் சங்கிலி பறிப்பு
விழுப்புரம் மாவட்டம் சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி கஸ்தூரி(43). இவர் மேல்மலையனூர் அருகே தேவனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் கஸ்தூரி மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
வணக்கம்பாடி ஏரிக்கரை அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென கஸ்தூரியின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மொபட்டை சாலையோரமாக நிறுத்தி விட்டு திருடன், திரு டன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு சென்று விட்டார். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் ஆசிரியையிடம் மர்ம நபர் தங்க சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.