ரூ.750 கோடியில் காற்றாலை முனையம் : துறைமுக ஆணைய தலைவர் தகவல்

X
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.750 கோடி மதிப்பில் காற்றாலை மின்முனையம் அமைக்கப்பட உள்ளது என்று துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த்குமார் புரோகித் தெரிவித்தார். வருகிற அக்டோபர் 27 முதல் 31 வரை மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வார விழா – 2025 மாநாட்டை முன்னிட்டு தூத்துக்குடியில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1 லட்சம் பிரதிநிதிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கே ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு இந்திய கடல்சார் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
Next Story

