குமரியில் 7.55 கோடியில் வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
குமரி மாவட்டத்தில் பல்வேறு பேரூராட்சிகளில் வmர்ச்சி திட்ட பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கப்பியறை பேரூராட்சியில் SFC-URDF திட்டத்தின் கீழ் ரூ.80 இலட்சம் மதிப்பில் சாலை பணியும், ரூ.93 இலட்சம் மதிப்பில் புலிமுகத்தான் குறிச்சி, பாம்பூரிவாய்க்கால் சாலை பணி, அதனைத்தொடர்ந்து மணவாளக்குறிச்சி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.2 கோடியில் தார் சாலை அமைத்து மேம்பாடு செய்யும் பணிகளை துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் வெள்ளிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.92 இலட்சம் மதிப்பில் சாலைப்பணியும், கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயலற்ற நிதி (2023 - 24) திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியும்,
கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.48 இலட்சம் மதிப்பில் இராஜாக்கமங்கலம் அண்ணா காலனி சாலை மேம்பாட்டு பணிகள், தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் Peri Urban (2023-24) திட்டத்தின்கீழ் ரூ.37.46 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியும், ரூ.15 இலட்சம் மதிப்பில் கடற்கரை சாலை முதல் தாமரை குட்டிவிளை வரை தார் சாலை அமைக்கும் பணியும், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.92 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் என மொத்தம் ரூ.7.55 கோடி மதிப்பிலான சாலைப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
இப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மேயர் மகேஷ், பேரூராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்