வாணியம்பாடியில் 75வது பவள விழா
விழாவில் கலந்து கொண்டவர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவியருவி பேராசிரியரர் முனைவர் அப்துல் காதர் 75 பவளவிழா மற்றும் இருநாள் இலக்கியத்திருவிழா நடைப்பெற்றது.. இந்த இலக்கியத்திருவிழாவில் முதற்நிகழ்ச்சியாக அறிவுலகம் பாராட்டுகிறது என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று கவியருவி களஞ்சியம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து கவியுலகம் பாராட்டுகிறது என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்த்தில் பங்கேற்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பூக்களுக்குகாக ஒரு பூபாளம் என்ற தலைப்பில் நூலை வெளியிட்டார்.. மேலும் ஆன்மீக உலகம் பாராட்டுகிறது, மேடையுலகம் ,பாராட்டுகிறது, கலையுலகம் பாராட்டுகிறது, சமய நல்லிணக்க உலகம் பாராட்டுகிறது, மாணவர் உலகம் பாராட்டுகிறது, இலக்கிய உலகம் பாராட்டுகிறது,
அரசியல் உலகம் பாராட்டுகிறது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது..
இந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளன், ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், திராவிடர் விடுதலை கழக தலைவர் சுப.வீரபாண்டியன், மற்றும் தொழிலதிபர்கள், பல அரசியல் கட்சியினர், தமிழ் கவிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்..