கள்ளக்குறிச்சியில் டி ஆர் பி தேர்வு 768 பேர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சியில் டி ஆர் பி தேர்வு 768 பேர் பங்கேற்பு

டிஆர்பி தேர்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் 768‌ பேர் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலம் நிரப்பப்பட்டு வந்தன. கடந்த 2013ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களைக் கொண்டு காலிப் பணியிடங்கள் நிரப்பட்டன.

இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் (யு.ஜி., - டி.ஆர்.பி.,) போட்டி தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, கடந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான டி.ஆர்.பி., போட்டித்தேர்வு தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 3 மையங்களில் தேர்வு நடந்தது.

இதில், 791 பேர், தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 768 பேர் மட்டுமே தேர்வெழுதினர். தேர்வினை அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா, சி.இ.ஓ., முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story