மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா
ரத்த தான முகாம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது இதனை முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் பி. கண்ணன், அரங்கநாதன் டி.சுரேஷ் குமார், மாவட்ட இணை செயலாளர் சகானா சஞ்சீவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story