77வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது..

X
விருதுநகர் அருகே முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.. விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கலைவாணன் ஏற்பாட்டில் கண் பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவை தலைவர் விஜயகுமரன் துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் அப்பகுதியை சார்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் விருதுநகர் நகரக் கழக செயலாளர் வெங்கடேஷ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சேது உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
Next Story

