77-வது குடியரசு தினம்: நாட்டு மக்களுக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் வாழ்த்து!

X
Namakkal King 24x7 |25 Jan 2026 7:48 PM ISTஎந்த ஒரு பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் குடியரசு தின விழாவை கொண்டாடுவோம்.
நாட்டு மக்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது... இந்திய நாடு 77 வது குடியரசு தின விழாவை கொண்டாடவிருக்கும் இந்த வேலையில் எந்த ஒரு பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் குடியரசு தின விழாவை கொண்டாட வாழ்த்துகிறேன். இந்த குடியரசு தினத்தில் குற்றங்களுக்கு காரணமான தனி மனித தவறுகளை தவிர்க்க, தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்த உறுதி எடுத்துக் கொள்வோம். அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் 77-வது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
