78 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனர் கைது !

78 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனர் கைது !
X
உள்ளாட்சி சாலை பணிக்காக ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.
உள்ளாட்சி சாலை பணிக்காக ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார். மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த கலைவாணி என்பவர், சாலை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிறுவனத்தின் நிதி விவரங்களை நிர்வகித்த ராஜன், ஆன்லைன் பரிவர்த்தனை வசதிக்காக தனது மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பண பரிவர்த்தனையில் சந்தேகம் எழுந்த நிலையில், கலைவாணி கணக்குகளை பரிசோதித்ததில், ராஜன் ரூ.1.11 கோடி அளவில் முறைகேடு செய்ததும், அதில் ரூ.78 லட்சம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் கணக்கில் மாற்த்ததும் தெரியவந்தது. மனுவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோசடி உறுதியானதை அடுத்து ராஜன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story