நவோதயாஅகாடமி பள்ளியில் 78-வது சுதந்திரதினவிழாகொண்டாட்டம்

நவோதயாஅகாடமி பள்ளியில் 78-வது சுதந்திரதினவிழாகொண்டாட்டம்

நவோதயா அகாடமி 

நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியில் இன்று 15.08.2024 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் 78-ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் Chair பேர்சொன் சரஸ்வதி தர்மலிங்கம் அவர்கள் தேசியகொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை கூறினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளியின் செயலாளர் தனபால் அவர்களும் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்கள் மாணவ, மாணவியர் தேசப்பற்றோடு வளரவேண்டும். நாட்டையும், நாட்டுமக்களையும் பாதுகாக்கும் நல்ல தலைவர்களாக உருவாகவேண்டும். அதற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்கவேண்டும்.

தாயையும், தாய்நாட்டை நேசிக்கும் தேசப்பற்று உடைய தலைவராக வரவேண்டும் என்று வாழ்த்தினார். நமது தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்வை பள்ளி மாணவத் தலைவன் முன்னின்று வழிநடத்த, நமது நாட்டின் ஒற்றுமைக்கான உறுதிமொழியை பள்ளி மாணவித் தலைவி வழிநடத்தினார். பள்ளி மாணவமாணவியர் அனைவரும் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டகுழந்தைச் செல்வங்கள் நேதாஜி, காந்தி, பகத்சிங், திருப்பூர்குமரன், பாரதமாதா, பாரதியார், ஜான்சிராணி, வீரபாண்டியகட்டபொம்மன் வேடமிட்டு வந்திருந்தனர். அவர்களுக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டது. மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இறுதியில் பள்ளிமுதல்வர் ஆண்டனிராஜ் அவர்கள் அனைவருக்கும் நன்றியுரை கூறினார். நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு 11 மணிக்கு நாட்டுப்பண்னுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

Tags

Next Story