79-வது இந்திய சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஏற்றுக்கொண்டார

79-வது இந்திய சுதந்திர தினவிழாவில்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஏற்றுக்கொண்டார
X
79-வது இந்திய சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்.,த.கா.ப., அவர்கள் வரவேற்றார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 9.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளை நிற புறாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பறக்க விட்டார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 50 காவலர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 15 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமை, 20 மற்றும் 10 ஆண்டுகள் விபத்தில்லா சேவை புரிமைந்தமை, மாநில அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள், பசுமை சாதனையாளர் விருதுகளாக என 13 அலுவலர்களுக்கும், சதுரகிரி மலைப்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றிய 7 அலுவலர்களுக்கும் என பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த மொத்தம் 258 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றது.
Next Story