79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைகள் மற்றும் தேச தலைவர்கள் வேடமடைந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி...

79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைகள் மற்றும்  தேச தலைவர்கள் வேடமடைந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி...
X
79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைகள் மற்றும் தேச தலைவர்கள் வேடமடைந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி...
79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைகள் மற்றும் தேச தலைவர்கள் வேடமடைந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி... ஆப்ரேஷன் சிந்துர் வெற்றியைத் தொடர்ந்து அதனை விழிப்புணர்வு செய்யும் விதமாக போர் விமானத்துடன் பேரணி... 79வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார்(வித்யா மந்திர்) பள்ளி சார்பில் நாட்டுப்புற கலைகள்,சிலம்பம் சுற்றுதல்,குச்சிப்புடி மற்றும் தேச தலைவர்கள் மகாத்மா காந்தி, பாரதமாதா, நேருஜி, சுபாஷ் சந்திர போஸ், ஜான்சிராணி, வீரபாண்டிய கட்டபொம்மன் ,போல் வேடம் அணிந்து ராசிபுரம் முக்கிய வீதிகளான பழைய பேருந்து நிலையம், கடை வீதி, ஆத்தூர் சாலை, சேலம் சாலை,அண்ணா சாலை,நாமக்கல் சாலை உள்ளிட்ட வழியாக சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். மேலும் ஆபரேஷன் சிந்துர் வெற்றியைத் தொடர்ந்து அதனை போற்றும் விதமாக போர் விமான வடிவில் அமைத்தும், விமானப்படையினர் உடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.. மேலும் சாலை பாதுகாப்பு குறித்தும், பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மாணவ மாணவிகள் கோஷங்கள் எழுப்பி தேசப்பற்றுடன் இந்த பேரணியை சிறப்பாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை பள்ளியின் தலைவர் டாக்டர் சி. நடராஜீ ஏற்றி வைத்து தலைமையுரையாற்றினார். பள்ளியின் முதல்வர் டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். பள்ளியின் செயலர் வி. சுந்தரராஜன் சுதந்திர தின சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ஏ.பி ராமசாமி பொதுநல மருத்துவர், சேலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளியின் துணைத் தலைவர் டாக்டர் எம். இராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்தார். சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.எம் கிருஷ்ணன் நினைவு பரிசு வழங்கினார்‌. அவர்தம் உரையில் ஆரோக்கியமே செல்வம், உடல் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும் என்று சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். ரஷாபந்தன் சிறப்பு விருந்தினரை பள்ளியின் பொருளாளர் வி. இராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். ரஷா பந்தன் சிறப்பு விருந்தினராக முனைவர் கே‌. குமாரசாமி, சேர்மன் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஸ்ரீ வித்யா மந்திர் இன்டர்நேஷனல் பள்ளியின் சேர்மன் இன்ஜினியர் என். மாணிக்கம் பொன்னாடை அணிவித்தார். சிறப்பு விருந்தினருக்கு இராசிபுரம் விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். சந்திரசேகரன் நினைவு பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் ரக்சை அணிவதன் சிறப்பைப் பற்றியும், சகோதரத்துவத்தையும், மொழிபற்றையும், தேசப் பக்தி பற்றியும் எடுத்துக் கூறினார். இவ்விழாவில் பள்ளியின் தலைவர் டாக்டர் சி. நடராஜீ, செயலர் வி. சுந்தரராஜன், பொருளாளர் வி. இராமதாஸ், துணைத் தலைவர் டாக்டர் எம். இராமகிருஷ்ணன், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி சேர்மன் டாக்டர் கே. குமாரசாமி, இணைச் செயலர் வி. பாலகிருஷ்ணன், நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.எம் கிருஷ்ணன், இயக்குநர் ஆர்‌. பெத்தண்ணன், ஸ்ரீ வித்யா மந்திர் இன்டர்நேஷனல் பள்ளியின் சேர்மன் இன்ஜினியர் என். மாணிக்கம், ஆர்விஇடி செயலர் எஸ். சந்திரசேகரன், மெட்ரிக் பள்ளி முதல்வர் டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி, கல்வியியல் கல்லூரி முதல்வர் செல்வி‌. கவிதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், உறுப்பினர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழா முடிவில் ஸ்ரீ வித்யா மந்திர் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் சி. புனிதா நன்றியுரை ஆற்ற தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவின் முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Next Story