79 வது சுதந்திரம் : 79 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் - போதை எதிராக பிரசாரம் !

X
போதை இல்லா உருவாக்க போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 79 வது சுதந்திரத்தை முன்னிட்டு 79 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகர காவல் ஆணையர். இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப் பழக்கத்தால், பாதை மாறி, வருங்கால இளைஞர்களின் வாழ்க்கை பயணம் கேள்விக்குறியாகி, போதைக்கு அடிமையாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் உடலுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக உடல் நலத்தை பேணி காக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இவருடன், ஏராளமான சைக்கிள் ஒட்டிகள் மாநகரத்தை சுற்றி 79 கிலோ மீட்டர் சைக்கிளில் பிரச்சாரம் சென்றனர். 79 கிலோ மீட்டர் போலீஸ் கமிஷனர் முழுமையாக சைக்கிள் ஓட்டியது விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டது பொதுமக்கள் இடையே வரவேற்பு பெற்றது.
Next Story

