திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 79 பேர் காயம்!
இலுப்பூர் அருகே திருநல்லூரில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது காலை 8:30 மணிக்கு கோயில் காளை அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு திடலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து முத்துமாரியம்மன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
9.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை டிஆர்ஓ செல்வி, ஆர்டிஓ தெய்வநாயகி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தொடங்கும் தொடங்கி வைத்தனர். இதில் புதுகை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் களம் இறக்கப்பட்டன.145 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி திறமையை வெளிப்படுத்தினர். அப்போது காளைகள் முட்டியதில் சத்யராஜ் (30), கருப்பையா (32), குணா (22 ),சங்கர வேலு (20), சக்திவேல் (23), ஐயப்பன் (29) உள்பட 79 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த எட்டு பேர் புதுக்கோட்டை, திருச்சி, இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.