8 ஆண்டாகியும் வீணாகும் பஸ் ஸ்டாண்ட்

8 ஆண்டாகியும் வீணாகும் பஸ் ஸ்டாண்ட்

 வீணாகும் பஸ் ஸ்டாண்ட்

செந்துறை : திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் ரூ.1.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் நிலையில் உள்ளது. செந்துறையில் ஊராட்சி அலுவலகம் முன்பு பஸ்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் இடநெருக்கடி அதிகரிக்க 8 ஆண்டுகளுக்கு முன் செந்துறை அவுட்டர் பகுதியில் ரூ.1.50 கோடியில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. 20க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டது. இந்த பஸ் ஸ்டாண்ட் இன்னும் பயன்பாட்டிற்கு வராததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. பஸ் ஸ்டாண்ட்டில் சமூக விரோத செயல்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story