ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்த பெட்டமைன் என்ற போதை பொருளை

X
நாகை விழுந்தமாவடியை சேர்ந்தவர் அலெக்ஸ் (28). இவர் மீது போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நாகையிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்த அலெக்ஸை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து போலீசார் 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அலெக்சிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி ஆகும். பின்னர், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அலெக்ஸை, புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, புதுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அலெக்ஸை கைது செய்தனர். மேலும், அலெக்சிடம, போதை பொருளை ஒப்படைக்க வந்த கோஷ்டி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

