கோவா8: பருவமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு: பரம்பிக்குளம் அணையில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

X
பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பி.ஏ.பி. அணைகள் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பரம்பிக்குளம் அணையில் நீர்மட்டம் 71.65 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 3,629 கன அடி நீர் வரத்து பதிவாக, ஆரம்பத்தில் 3 மதகுகள் வழியாக 1,200 கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் வரத்து அதிகரிப்பதால் 3,000 கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து இன்றும் உபரிநீர் திறப்பது தொடர்கிறது.
Next Story

