8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
X
திண்டுக்கல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைப்பு
திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு திண்டுக்கல், ஆரியநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ்(69) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் முனியம்மா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story