ரூ.8 லட்சம் மதிப்பிலான பயோ டீசல் பறிமுதல்: 2 பேர் கைது

ரூ.8 லட்சம் மதிப்பிலான பயோ டீசல் பறிமுதல்: 2 பேர் கைது
தூத்துக்குடியில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான சுமார் 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறிவைத்து கள்ள சந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது‌ இதைத்தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு மீன் பிடித் துறைமுகத்திற்கு கள்ள சந்தையில் பயோ டீசல் விற்பனைக்கு வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரியை சோதனையிட்டபோது அதில், ரூ.8 லட்சம் மதிப்பிலான சுமார் 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் இருந்தது. இதைடுத்து பயோ டீசல் பேரல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மில்லர் புரத்தைச் சார்ந்த கந்தன் மற்றும் கே.வி.கே நகர் பகுதியைச் சார்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரை கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பயோ டீசல, லாரியுடன் கைது செய்யப்பட்ட 2 பேரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story