8 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மானாமதுரை அருகே 7 பேர் கைது

8 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மானாமதுரை அருகே 7 பேர் கைது
X
மானாமதுரை அருகே 8 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதிகாரிகளின் விழிப்புணர்வால் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இரு தினங்களுக்கு முன் இப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் பாலியல் சீண்டல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது 8 குழந்தைகள் தங்களது பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அப்பகுதியைச் சேர்ந்த ராமு(46), பழனி(46), லெட்சுமணன்(46), சசிவர்ணம்(38), மணி(50), முனியன்(66) மூக்கன்(72) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களில் இருவரை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆத்திரத்தில் தாக்கினர். இதில் காயமடைந்த ஒருவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Next Story