8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூர் ரயில் நிலையத்தில் DREU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.....

X
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூர் ரயில் நிலையத்தில் DREU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..... நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தில் இன்று தட்சன் ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் (DREU ) எட்டு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் பெரோஸ் கான் தலமை வகித்தார். செயலாளர் முகமது ரபீக் முன்னிலை வகித்தார் .சிறப்பு விருந்தினராக மாவட்ட சிஐடியு சங்க செயலாளர் வினோத் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்,காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,ரயில்வே பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது,ஒப்பந்த பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் பணியிடம் மாறுதல் செய்து கொடுக்க வேண்டும், விலைவாசிக்கு ஏற்றார் போல் ஊழியர்களுக்கு பஞ்சபடி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், 8-வது ஊதியக்குழு பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Next Story

