திருப்பூரில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உட்பட 6பேர் கைது
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை குறித்து மாநகர காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூங்கா நகர் பகுதியில் நேற்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
பூங்கா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த l பாலகிருஷ்ணன் ( 24 ) ஜீவானந்தம் ( 26 )என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் திருநெல்வேலிருந்து பேருந்து மூலம் கஞ்சா கொண்டுவரப்படுவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்போது பேருந்தில் வந்து இறங்கிய திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (20 ) மற்றும் 16 வயதுடைய சிறுவன் இருவரும் கஞ்சா கொண்டு வந்தது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.