8வது ஆம்புலன்ஸ் ஆக கொல்லிமலைக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய KPY.பாலா தனக்கு அரசியல் ஆசை கிடையாது சம்பாதிக்கிற பணத்தை மக்களுக்கு செலவு செய்ய வேண்டும் KPY.பாலா பேட்டி...

X
Rasipuram King 24x7 |15 Oct 2025 8:53 PM IST8வது ஆம்புலன்ஸ் ஆக கொல்லிமலைக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய KPY.பாலா தனக்கு அரசியல் ஆசை கிடையாது சம்பாதிக்கிற பணத்தை மக்களுக்கு செலவு செய்ய வேண்டும் KPY.பாலா பேட்டி...
தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர் KPY.பாலா தொடர்ந்து மலைவாழ் கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ வழங்கி வருகிறார்.அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிக்கு உட்பட்ட ஆரியூர்நாடு ஊராட்சி தெம்பளம் பகுதியில் மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக ஆம்புலன்ஸ் செயல்பாடு துவக்க விழாவானது நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தனியார் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் KPY.பாலா கலந்துகொண்டு தனது ஆம்புலன்ஸ் மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். அப்பகுதி மக்கள் முன்னிலையில் ஓட்டுநர் துரை என்பவரிடம் வழங்கி, பொதுமக்கள் அனைவருக்கும் KPY.பாலா கறிவிருந்து வழங்கி உணவு உண்டனர்... தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நான் அறக்கட்டளை சார்பில் பணம் வழங்கியதாகும்,தான் ஆம்புலன்ஸ் வழங்கிய பிறகு அதன் FC முடிந்தது தெரிய வந்ததால் பின்னர் 2வது நாள் புதிய ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளேன். இது 8வது ஆம்புலன்ஸ் இல்லை இன்னும் 35 ஆம்புலன்ஸ் வரையும் தருவேன். இப்ப வழங்கிய வண்டி கூட 6 மாத காலத்தில் இன்சூரன்ஸ் முடிவடைவதாகவும், அதனை தானே கூட புதுப்பித்து தருவதாக கூறினேன் ஆனால் இப்பகுதி மக்கள் தாங்களே செலுத்திக் கொள்வோம் என தெரிவித்தனர்.இது எனக்கும் மக்களுக்கும் இடையே நடக்கிற விஷயம். எனக்கு கடைசி வரைக்கும் அரசியல் ஆசை கிடையாது சம்பாதிக்கிற பணத்தை மக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டங்களை செய்ய வேண்டும் என கூறினர்..
Next Story
