சிமெண்டு பூச்சு விழுந்து 8 மாணவர்கள் காயம் !

சிமெண்டு பூச்சு விழுந்து 8 மாணவர்கள் காயம் !

மாணவர்கள் காயம்

செய்யாறு அருகே அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு விழுந்து 8 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 23.8.2023 அன்று திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தில் அமர்ந்து மாணவர்கள் பயின்று வந்தனர். இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து திடீரென மாணவர்கள் மீது விழுந்தது. இதில் 8 மாணவர்கள் காயம் அடைந்தனர்.மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story