80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காங்கிரட் சாலை மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் ஆகியவையை அப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக இன்று அர்ப்பணிக்கப்பட்டது

80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காங்கிரட் சாலை மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் ஆகியவையை  அப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக இன்று அர்ப்பணிக்கப்பட்டது
X
கட்சித் தொண்டர்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒன்றியம் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோழரா மட்டும் கிராமத்தில் சமுதாயக்கூடம் மற்றும் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காங்கிரட் சாலை மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் ஆகியவையை அப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக இன்று அர்ப்பணிக்கப்பட்டது இந்த விழாவில் நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ .இராசா அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்தார் இந்த விழாவில் தமிழ்நாடு அரசு தலைமை கொரடா மாண்புமிகு க ராமச்சந்திரன் எம்எல்ஏ அவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சித் தலைவர் அவர்கள் , திமுக மாவட்டபொறுப்பாளர் கே.எம்.ராஜி,நீலகிரி மாவட்ட வன அலுவலர் அவர்கள் குன்னூர் வட்டாட்சியர் அவர்கள் ,குன்னூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ,குன்னூர் வன சரகர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் , முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சுனிதா நேரு அவர்கள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மீனா ஆனந்தராஜ் அவர்கள் மற்றும் பல அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் 30 ஆண்டு காலமாக தார் சாலை வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்தில் வசித்து வந்த சோழரா மட்டம் பகுதி மக்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டில் பணியினை தொடங்கி வைத்தார் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா அவர்கள் மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நீலகிரி மாவட்ட விவசாய தொழிலாளர் அணியின் சார்பாக அதன் அமைப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்களின் ஏற்பாட்டின் நலத்திட்ட உதவிகள் சுமார் 600 க்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் தலைமை வகித்த விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார் இந்த நிகழ்வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளர் வாசிம் ராஜா அவர்கள் நீலகிரி மாவட்ட துணை செயலாளர் திரு ரவிக்குமார் அவர்கள் செல்வி லட்சுமி அவர்கள் குன்னூர் நகரக் கழகச் செயலாளர் ராமசாமி அவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
Next Story