தூத்துக்குடி மாவட்டத்தில் 80 சதவிகிதம் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கி ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுவதாக அறிவித்திருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் கோவில்பட்டி உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து மொத்தம் 302 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 80 சதவிகிதம் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் வழக்கம்போல் பயணம் செய்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர் இருந்த போதும் ஒரு பணி மைக்கு தற்காலிகமாக 40 ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வீதம் தயார் நிலையில் உள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கையை அரசு பொங்கல் பண்டிகைக்கு பிறகு நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கை இருப்பதால் அனைத்து பேருந்துகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story