தேவாலய பாரதியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை!
புதுக்கோட்டை மாலையிடு கப்பத்தான் பாலம் அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியாக இருப்பவர் ஜான் தேவ சகாயம் இவர் புதுக்கோட்டை கணேஷ் நகர் ஒன்றாம் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக உறவினரின் விசேஷ வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இன்ன தனது வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதாவது வீட்டின் பின்புறம் உள்ள கேட் உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சடைந்தார்.
உடனடியாக வீட்டினுள் சென்று பார்க்கும் பொழுது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பின்னர் சோதனை செய்தலில் பீரோவில் வைத்திருந்த நகைகள் காணாமல் போயிருந்தது உடனடியாக இது குறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்ததில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.