800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மைக்கேல்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அத்துமீறி கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மைக்கேல்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அத்துமீறி கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு ரேஷன் அரிசி கடை வாங்கி குவித்து சிலர் வருகின்றனர். இவர்கள் ரேஷன் அரிசி மூடையாக சேர்ந்த பின்பு, பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு அரிசியை கடத்துகின்றனர். மேலும் இங்கே இலவசமாக தரப்படும் அரிசியை கிலோ 5 ரூபாய்க்கு வாங்கி, பத்து ரூபாய்க்கு விற்கப்படுவதால் லாபம் கிடைக்கிறது. ரேஷன் அரிசி விற்கப்படுவதை ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

போலீசார் தொடர்ந்து ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைக்கேல்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்த தெய்வேந்திரன் கைது செய்தனர். அவரிடம் இருந்து 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story