முறையூரில் 800 ஆண்டுகள் பழமையான தேரோட்டம்

முறையூரில் 800 ஆண்டுகள் பழமையான தேரோட்டம்

முறையூரில் 800 ஆண்டுகள் பழமையான தேரோட்டம் நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


முறையூரில் 800 ஆண்டுகள் பழமையான தேரோட்டம் நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே முறையூரில் அருள்பாளிக்கும் அன்னை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன ஐம்பெரும் திருத்தேரோட்ட விழா விமர்சையாக நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு ஆனி திருமஞ்சன ஐம்பெரும் திருத்தேரோட்ட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த புதன்கிழமை ஜூன் 12 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் ஆனி திருமஞ்சன பெருந்திருவிழா துவங்கியது.

அன்றிலிருந்து தினசரி பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்வான இன்று 9 ஆம் நாளில் பஞ்சமூர்த்திகளான பிரியாவிடை உடனான ஸ்ரீசொக்கநாதர், அன்னைஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவயானை உடனான சுப்பிரமணியர், ஸ்ரீசன்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐவரும் தனித்தனி ஐம்பெரும் திருத்தேர்களில் அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து தீப ஆரத்தி நிறைவு பெற்றவுடன் பக்தர்கள் வடம்பிடித்து திருத்தேரோட்ட விழாவை துவங்கி வைத்தனர். திருத்தேரோட்டம் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது. தேரோட்ட திருவிழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story