மூதாட்டி தவறவிட்ட 80 ஆயிரம் பணம் ஒப்படைப்பு

மூதாட்டி தவறவிட்ட 80 ஆயிரம் பணம் ஒப்படைப்பு

உசிலம்பட்டியில் மூதாட்டி தவறவிட்ட 80 ஆயிரம் பணம்,செல்போனை உறவினர்களிடம் ஒப்படைத்த போக்குவரத்து ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


உசிலம்பட்டியில் மூதாட்டி தவறவிட்ட 80 ஆயிரம் பணம்,செல்போனை உறவினர்களிடம் ஒப்படைத்த போக்குவரத்து ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் விபத்தில் சிக்கிய மூதாட்டி தவற விட்ட 80 ஆயிரம் ரொக்கம், செல்போனை மூதாட்டியின் உறவினரிடம் பத்திரமாக ஒப்படைத்த போக்குவரத்து கழக ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள அல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜாத்தி, 70 வயதான இந்த மூதாட்டி லோன் மூலம் கிடைத்த 80 ஆயிரம் ரூபாய்-யை வாடிப்பட்டியில் உள்ள தனது மகளான மகேஸ்வரியிடம் கொடுப்பதற்காக உசிலம்பட்டி பேருந்து நிலையம் வந்துள்ளார்.

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் இறங்கி சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது பின்புறமாக வந்த அபே ஆட்டோ மோதியதில் தலையில் படுகாயமடைந்து மயங்கியுள்ளார்., உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது., இந்நிலையில் மூதாட்டி கொண்டு வந்த கட்டை பை தவறி கீழே கிடந்ததைக் கண்ட பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த அரசு போக்குவரத்து கழக நேர காப்பாளர் சென்ராயன், பையில் 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் இருந்ததை அறிந்து, தன்னுடன் பணியில் இருந்த மற்றுமொரு நேர காப்பாளர் ஜெயம் என்பவரது உதவியுடன் மூதாட்டியின் செல்போன் மூலம் அவரது மருமகனான ராமநாராயணன் என்பவரை தொடர்பு கொண்டு மூதாட்டி தவற விட்ட 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை பத்திரமாக ஒப்படைத்தனர்., விபத்தில் சிக்கிய மூதாட்டி தவற விட்ட 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை மூதாட்டியின் உறவினரிடம் பத்திரமாக ஒப்படைத்த போக்குவரத்து கழக ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,

Tags

Next Story