தர்மபுரி தொகுதியில் 81.48 சதவிகிதம் வாக்கு பதிவு
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் ஒருசில வாக்குச்சாவடிகளில் டோக்கன் முறையில் வாக்குப்பதிவு இரவு வரை நடந்தது. மொத்தம் 12 லட்சத்து 38 ஆயிரத்து 183 வாக்காளர் வாக்களித்தனர். இதில், ஆண் வாக்காளர்கள் 6,23,850, பெண் வாக்காளர் கள் 6,14,242, திருநங்கைகள் 91பேர் வாக்களித்துள்ளனர். அதாவது மொத்தம் 81.20 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
தர்மபுரி நாடாளு மன்ற தொகுதியில் திமுக,அதிமுக,நாம்தமிழர் கட்சி,பாமக, மற்றும் சுயேட்சைகள் என 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இந்த நிலையில் நடந்து முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலில் பாலக்கோடு தொகுதியில் 84.94 சதவீதமும், பென்னாகரம் தொகுதியில் 82.76 சதவீதமும், தர்மபுரி தொகு தியில் 80.96சதவீதமும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி யில் 82.80 சதவீதமும், அரூர் தொகுதியில் 79.83 சதவீதமும், மேட்டூர் தொகுதியில் 76.41சதவீதமும், என மொத்தம் 81.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.