வாகன சோதனையில் 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

வாகன சோதனையில் 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

சிவகங்கையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ரூபாய் 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


சிவகங்கையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ரூபாய் 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன்கோட்டை அடுத்த உடவயல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவர் கோவில் சிற்ப வேலைகள் செய்யும் ஒப்பந்ததாரர் ஆவார். இவர் கோவில் கட்டுமான பணிக்காக தனது காரில் ரூ85 ஆயிரம் பணத்துடன் சிவகங்கை நோக்கி வந்துள்ளார். அம்பேத்கர் சிலை அருகேவரும்போது அங்கு நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட துணை தாசில்தார் சங்கர் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழு வாகனங்களை சோதனை செய்துள்ளனர்.

இதில் ஒப்பந்ததாரர் செந்திலின் வாகனத்தை சோதனை செய்தபோது உரிய ஆவனங்களின்றி உள்ளே வைத்திருந்த ரூ 83 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்ததுடன் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் கண்காணிப்பு குழு சோதனையில் மாவட்டத்தில் முதல்முறையாக ரூ83 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story