830 மாணவர்களுக்கு பணி ஆணை

830 மாணவர்களுக்கு பணி ஆணை
X
ஆணை
கள்ளக்குறிச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 830 மாணவ-மாணவியருக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த முகாமில், முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் சக்திவேல் வரவேற்றார்.இதில், 21 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்திற்கான பணியாட்களை தேர்வு செய்தனர். முகாமில், வேலை வாய்ப்பு பெற்ற, 830 மாணவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Next Story