நீலகிரி லோக் அதாலத்‍ 846 வழக்குகளுக்கு தீர்ப்பு!

நீலகிரி லோக் அதாலத்‍ 846 வழக்குகளுக்கு தீர்ப்பு!

நீதிமன்ற வளாகம் 

நீலகிரி மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் 846 வழக்குகளுக்கு தீர்வு காணப்பபட்டது.
நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான அப்துல் காதர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் லிங்கம் முன்னிலை வகித்தார். லோக் அதாலத்தில் தண்ணீர், மின்சார கட்டணம் தொடர்பான வழக்குகள் காசோலை மோசடி வழக்குகள் தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதேபோல் கோத்தகிரி, குன்னூர், கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. பொதுமக்கள், வங்கி மேலாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நீலகிாி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையிலிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 846 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 கோடியே 69 லட்சத்து 56 ஆயிரத்து 702 என்று கோர்ட்டு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story