போலீஸ் உடற்தகுதி தேர்வில் 86 பேர் ஆப்சென்ட்

போலீஸ் உடற்தகுதி தேர்வில் 86 பேர் ஆப்சென்ட்

  காஞ்சிபுரத்தில் நடந்த இரண்டாம் நிலை போலீஸ் உடற்தகுதி தேர்வில் 86 பேர் பங்கேற்கவில்லை.

காஞ்சிபுரத்தில் நடந்த இரண்டாம் நிலை போலீஸ் உடற்தகுதி தேர்வில் 86 பேர் பங்கேற்கவில்லை.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, இரண்டாம் நிலை காவலர்களுக்கு, உடற்தகுதி தேர்வு, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், நடந்தது. இதில், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., பொன்னி, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் ஆகியோர் காவலர் உடற்தகுதி தேர்வு செய்யும் இடத்தில், மாவட்ட விளையாட்டரங்கில் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 400 நபர்கள் பங்கேற்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.

இதில், 314 நபர்கள் மட்டுமே வந்திருந்தனர். மீதம், 86 நபர்கள் பங்கேற்கவில்லை. காவலர் உடற்தகுதி தேர்வில், 256 நபர்கள் தேர்வாகியுள்ளனர். இதில், 58 நபர்கள் உடற்தகுதி தேர்வில் தேர்வாகவில்லை. இன்று, நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு, நாளை மறுதினம் நடைபெறும் என, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இதனால், இன்று, உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வரும் நபர்கள், நாளை, காலை, 6:00 மணிக்கு பங்கேற்கலாம் என, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் தெரிவித்துள்ளார்."

Tags

Next Story