பிளஸ் 1 தேர்வு: 86 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்வு: 86 சதவீதம் தேர்ச்சி

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் 86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16,299 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்தாண்டை விட 1.08 தேர்ச்சி சதவீதம் குறைந்தது. மாவட்டத்தில் உள்ள 122 பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் 9,363 மாணவர்கள், 9,589 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 952 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

அதில் 7,514 மாணவர்கள், 8,785 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 299 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 86 ஆகும். இது கடந்தாண்டை விட 1.08 சதவீதம் குறைவு ஆகும். இதில் கடுவனுார் அரசு மேல்நிலைப் பள்ளி, அ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 அரசு பள்ளிகள், 16 தனியார் பள்ளிகள் என 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் பிளஸ் 1 தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 36வது இடத்தை பிடித்துள்ளது.

Tags

Next Story