பள்ளி ஆண்டு விழா!

பள்ளி ஆண்டு விழா!

பள்ளி ஆண்டு விழா

நீலகிரியில் நகராட்சி பள்ளியின் 86வது ஆண்டு விழா நடந்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுமார் 120 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் 87-வது ஆண்டு விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை தாங்கினார். தொடக்கக் கல்வி அலுவலர் கோமதி முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், திறனாய்வு போட்டிகள் நடந்தன. இறுதியாக வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்னர். விழாவில் வட்டார கல்வி அலுவலர் நந்தினி, முன்னாள் தலைவர் கவிதா ராவ், டாக்டர் பாபுஜி மற்றும் சிறந்த இளைஞருக்கான விருது பெற்ற நேரு யுவகேந்திர அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை பிரனீளா செய்திருந்தார்.

Tags

Next Story