மதுரை அருகே 8 முதல் 10ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு

மதுரை அருகே 8 முதல் 10ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு

நடுகல் கண்டுபிடிப்பு

மதுரை அருகே 8 முதல் 10ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு
மதுரை அருகே 8 முதல் 10ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு மதுரை அருகே 8 முதல் 10ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட போர் வீரன் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் ஹாரூண் பாஷா, விவேக் ஆகியோர் மதுரை அருகே விக்ரமங்கலம் - கருமாத்தூர் செல்லும் சாலையில், மூணுசாமி கோயில் அருகே கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாலையில் ஒரு நடுகல் கிடப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அந்த நடுகல் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஹாரூண் பாஷா கூறும்போது, ''இந்த நடுகல் 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உடையது. போரில் இறந்த ஒரு போர் வீரனுக்காக இந்த நடுகல் அமைக்கப்பட்டு இருக்கிறது. முதுகில் உள்ள நெடிய வாளை வெளியில் எடுக்கும் வகையில் காட்சியளிக்கிறது. இடுப்பின் இடதுபுறம் வாளின் மறு பகுதியும், இடது புறம் சாட்டை வடிவில் சுருள் கத்தியும் இடம்பெற்றுள்ளன. இது போர் செயல்பாடுகளை குறிக்கும். நடுகல்லின் முகம் முழுமையாக சிதைந்துள்ளது. இப்பகுதி மக்கள் இதனை வீரன் கல் என்று அழைக்கின்றனர். மேலும் நம் பழமைச் சங்க இலக்கியமான புறநானூற்றில் நடுகல்லில் நந்தா விளக்கு வைத்து வழிபாடு நடத்தப்படுவதாக குறிப்பு உள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் விளக்கேற்றி வழிபாடு நடத்தும் வகையில் சிறு நந்தா விளக்குத்தூணும் அருகில் வைக்கப்பட்டுள்ளது. எழுத்துகள் ஏதும் காணப்படவில்லை என்றாலும், இது 8-10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததது என கருத்தில் கொள்ளலாம்'' என்றார்.

Tags

Next Story