டிச. 9ல் குமாரபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம்
Komarapalayam King 24x7 |5 Dec 2024 2:06 PM GMT
குமாரபாளையம் பகுதியில் டிச. 9ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் டிச. 9ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் டிச. 9ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை குமாரபாளையம்நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி.நகர், புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story