9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.
X
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 9வது புத்தகத் திருவிழாவினை மிகச்சிறப்பாக நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 9வது புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (25.01.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தவுள்ள 9வது புத்தகத் திருவிழா 31.01.2025 அன்று தொடங்கி 09.02.2025 வரை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள திடலில் நடத்தப்படவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 31.01.2025 அன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்க்ள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இப்புத்தகத் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள், 10,000க்கும் மேற்பட்ட தலைப்புகளிலான 1,00,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெறவுள்ளது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. இப்புத்தக கண்காட்சியில் அரசு முக்கிய துறைகள் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது. 10 நாட்கள் நடைபெறவுள்ள இப்புத்தக திருவிழாவினை சிறப்பாக நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். தினந்தோறும் அதிக அளவிலான பொதுமக்கள், மாணவ மாணவிகள் வந்து செல்லவுள்ளதால் அவர்களுக்கு தேவையான அளவு குடிநீர், கழிப்பறை வசதிகளை நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். புத்தகத் திருவிழா நடைபெறும் வளாகத்தை தினந்தோறும் தூய்மை செய்திட பணியாளர்களை நியமிக்க வேண்டும். புத்தகத் திருவிழாவிற்கு வருகைதரும் சிறப்பு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களை அழைத்து வருவதற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அதிக அளவில் மாணவ மாணவிகள் புத்தகத் திருவிழாவை கண்டுகளிக்க உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். மேடை அமைப்பு, பந்தல் உள்ளிட்டவைகளை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து, உறுத்திச்சான்ற வழங்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 9வது புத்தகத் திருவிழாவினை மிகச்சிறப்பாக நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்(குற்றவியல்) சிவா, தமிழ் பண்பாட்டு மைய தலைவர் சரவணன், மக்கள் பண்பாட்டு நிர்வாகிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், தனியார் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story