9வது பெரம்பலூர் புத்தகத்திருவிழா
9வது பெரம்பலூர் புத்தகத்திருவிழா - எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், கவிஞர் கவிதாசன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர் - பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து பெரம்பலூர் நகராட்சித்திடலில் நடத்தும் 9வது பெரம்பலூர் புத்தகத்திருவிழாவின் இரண்டாம் நாளான இன்றைய (01.02.2025) நிகழ்ச்சிக்ளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழத்தின் ஒருங்கிணைத்தனர். இன்றைய நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் தேசாந்திரி.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் "காலம் சொல்லும் பதில்" என்ற தலைப்பிலும், இமையம் "எனது இலக்கிய ஆசான்கள்" என்ற தலைப்பிலும் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் "தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி" என்ற தலைப்பிலும் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். ஏராளமான பொதுமக்களும், மாணவ மாணவிகளும் வருகை தந்து புத்தக அரங்குகளைப் பார்வையிட்டு, சிந்தனை அரங்கில் எழுத்தாளர்கள் கவிஞர்களின் கருத்துரைகளை கேட்டு மகிழ்ந்தனர். மூன்றாம் நாளான 02.02.2025 அன்று அகில இந்திய வானொலி, மேனாள் நிகழ்ச்சி இயக்குநர் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் "மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்கள்" என்ற தலைப்பிலும், பேராசிரியர், முனைவர்.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் "அன்பென்று கொட்டு முரசு" என்ற தலைப்பிலும், நகைச்சுவை நாவலர் புலவர்.மா.ராமலிங்கம் அவர்கள் "கற்றது கடுகளவு" என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள்.
Next Story



