9 ஆம் தேதி வேலூர் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

X
Paramathi Velur King 24x7 |4 March 2025 7:33 PM IST9 ஆம் தேதி வேலூர் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலுார்,மார்ச்.4: பரமத்தி வேலுார் அருகே, கவுண்டம்பாளையத்தில் விநாயகர், பட்டத்தரசி அம்மன், வெள்ளையம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள், முடிந்த நிலையில், கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். அதன்படி வருகின்ற 9 தேதி அதிகாலை, 4:30 மணிக்கு மங்கள இசையுடன் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து காலை 8 மணிக்கு பரமத்தி வேலுார் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு கோபுர கண் திறப்பு, கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் தெரிகிறது. 10 காலை 10 மணிக்கு விநாயகர், பட்டத்தரசி அம்மன், வெள்ளையம்மாள், பொம்மையம்மாள் சமேத மதுரை வீரன், கருப்பண்ணசாமி ஆகிய சுவா மிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
Next Story
