9 வயதான மாற்றுத்திறனாளி மகனுக்கு காதொலிக்கருவி கேட்ட தாய் - பத்தே நிமிடங்களில் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 வயதான மாற்றுத்திறனாளி மகனுக்கு காதொலிக்கருவி கேட்ட தாய் - பத்தே நிமிடங்களில் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர் வி.களத்தூர் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் க/பெ.முருகேசன் என்பவர் தனது 9 வயதான கவினேஷ் என்ற மாற்றுத்திறனாளி மகனுக்கு பிறவியிலேயே காது கேட்காத நிலை எனவும், மிகவும் ஏழ்மையான குடும்ப சூழலில் காதொலிக்கருவி வாங்க வசதியில்லை என்றும் கோரிக்கை வைத்திருந்தார். அவரின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக காதொலிக்கருவி வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலருக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், பத்து நிமிடங்களில் கவினேஷிற்கு இரண்டு காதுகளுக்கும் பொருத்தும் வகையில் காதொலிக்கருவிகள் வழங்கப்பட்டது. தனது குழந்தைக்கு காதொலிக் கருவி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கும், அரசிற்கும் அவரது தாய் நன்றி தெரிவித்துக் கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சு.சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வ.சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



